தேர்தலுக்குள் கச்சத்தீவை மீட்டு கொடுத்தால் எங்கள் வாக்கு பா.ஜ.க.வுக்கு- சீமான் பேச்சு

Apr 02, 2024 - 1 month ago

தேர்தலுக்குள் கச்சத்தீவை மீட்டு கொடுத்தால் எங்கள் வாக்கு பா.ஜ.க.வுக்கு- சீமான் பேச்சு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேனி மாவட்டம் கம்பம், போடி, திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி, பழனி ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் நடந்த பிரசார கூட்டத்தில் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசியதாவது:-பணம் இருப்பவர்கள்தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. அரசியல் என்பது மக்களுக்காக உழைக்க மட்டுமே.


இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் - தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி அவசர மனு

Mar 21, 2024 - 1 month ago

இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் - தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி அவசர மனு இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி அவசர மனு ஒன்றை தொடர்ந்துள்ளார். மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான மனுவில," தொண்டர்களையும், கட்சியையும் பாதிக்கும் என்பதால் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும். இரட்டை


தாமரை சின்னத்தில் போட்டியிட பா.ஜனதா நிர்ப்பந்தம்- ஓ.பி.எஸ். திணறல்

Mar 17, 2024 - 2 months ago

தாமரை சின்னத்தில் போட்டியிட பா.ஜனதா நிர்ப்பந்தம்- ஓ.பி.எஸ்.  திணறல் அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பாரதிய ஜனதா கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளார். பாரதிய ஜனதா கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. இந்த தொகுதிகளில் தனி சின்னத்தில் போட்டியிட ஓ.பி.எஸ். விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் பாரதிய ஜனதா கட்சியினரோ தாமரை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று நிர்ப்பந்தம்


இடைக்கால பொதுச்செயலாளராக ஈ.பி.எஸ் அறிவிக்கப்பட்டது செல்லும் - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Feb 23, 2023 - 1 year ago

இடைக்கால பொதுச்செயலாளராக ஈ.பி.எஸ் அறிவிக்கப்பட்டது செல்லும் -  உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.